சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7-வது முறையாக தமிழகம் வந்துள்ளார். இதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு செல்கிறார். அங்கு, பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்கிறார்.
No comments