• Breaking News

    பிறைமார்பனின் சீத்தா


    முதல் முறை அவன் குரல் அவளை ஆரத் தழுவிக் கொண்டது..

    அவள் இவ்வளவு நாள் சேர்த்து வைத்திருந்த அவன் மீதான மொத்த காதலையும் அந்த ஒற்றை குரலோசையில் அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

    அவனுடைய மன்னிப்பு கோரிய விண்ணப்பத்தில் அவள் மன்னிக்கவா?

    இல்லை அரவணைக்கவா?

    என்ற கேள்வி குறியாக நின்று கொண்டிருந்தாள்.

    அவன் மூச்சு விட்ட மூச்சுக் காற்றின் சுவாசத்தில் அவள் பசலையாய் தீக்குளித்துக் கொண்டிருந்தாள்...

    8 மாதத்தின் தவத்தின் பலன் தான் அந்த வரமாய்,, எதிர்பாரத நேரத்தில் வந்த அவனுடைய  குரல் பதிவு....

    கேட்டதும் பற்றிக் கொண்டாள்.

    அவளுக்குள் ஓர் திண்டாட்டம்.

    அவளுக்குள் ஓர் போராட்டம்

    மொத்தத்தில் அவள் அவளாக இல்லை.

    அமராவதி ஆற்றங் கரையில் துயில் கொண்டிருந்த பிறைமார்பன் எழுந்து விட்டான்.

    சீத்தா இனி வாழத் தொடங்கி விடுவாள்.

    A. சத்யா

    தமிழ்துறை உதவிப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

    No comments