• Breaking News

    அறந்தாங்கி பகுதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை


    புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி, மணமேல்குடி பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறை தென்பட்டதால் நேற்று (புதன்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. அறந்தாங்கி, வெட்டிவயல், கட்டுமாவடி, கிருஷ்ணாஜிப்பட்டினம், வடக்கம்மா பட்டினம், அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், ஆர்.புதுபட்டினம், கோபாலப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பிறகு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொழுகை முடிந்த பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த சிறப்பு தொழுகையில் பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு அதிகமான பெண்களும் கலந்து கொண்டனர்.

    No comments