• Breaking News

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றம்

     

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

    அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 19-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், 20-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.விழாவில் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். அந்த திருக்கல்யாணத்தை காண்பதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 22-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. 23-ந் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    No comments