• Breaking News

    பொன்னமராவதியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மதர் தெரசா வேளாண்மை கல்லூரி மாணவிகள்


    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தில் மதர் தெரசா வேளாண்மை கல்லுரி மாணவிகள் விவசாய நிலத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் செயல்முறை விளக்கம் குறித்து விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர்.இலுப்பூர் மதர் தெரசா கல்லூரியின் தாளாளர் உதயகுமார் வழிகாட்டுதலில்படி கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர். இராமச்சந்திரன், குழு ஆசிரியர் முனைவர் உதய நந்தினி, முனைவர்.சுபாஷ் சந்திரபோஸ்,பாட ஆசிரியர் செல்வி.கவிதா,செல்வி.பிரிண்லி சசிதா ஆகியோரின் ஆலோசனையின்படி மாணவிகள் நந்தினி, அபிநயசங்கரி தலைமையிலான மதர் தெரசா வேளாண்மை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகளின் தங்களின் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காட்டுப்பட்டி கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் மண் வளத்தை பெருக்க, ஜீவாமிர்தம் மற்றும் கன ஜீவாமிர்தம் பற்றிய செயல்முறை வடிவில் மாணவிகள் செய்து காட்டினர்.

    மேலும் ஜீவாமிர்தம் மூலம் மண்ணில் மண் புழுக்கள், நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும்.கன ஜீவாமிர்தத்தை நீர் குறைவான இடங்களில் மற்றும் மானாவாரி பயிர்களுக்கு பயன்படுத்தலாம் எனவும் கிராம மக்களுக்கு மதர் தெரசா வேளாண்மை கல்லுரி மாணவிகள் விளக்கி கூறினார்கள்.இதில் இயந்திர நடவு மற்றும் அவற்றின் பயன்களை பற்றியும் விரிவாக விளக்கி கூறினர்.இந்நிகழ்வில் மதர் தெரசா வேளாண்மை கல்லுரி மாணவிகள் தேனிஷா, காயத்ரி, ஜெயப்பிரதா, கனிமொழி,கீஷோல் ஶ்ரீ,மோகனப்பிரியா,நர்மதா,சிந்துகவி,சௌ.தர்ஷினிரெமிலா உள்ளிட்ட மாணவிகள் உடனிருந்தனர்.

    இரா.பாஸ்கர்  செய்தியாளர்

    No comments