தேனி: திமுக துணைப் பொதுசெயலாளர் கவிஞர் கனிமொழி சூறாவளி பிரச்சாரம் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பங்கேற்பு
திமுக துணைபொதுச் செயலாளரும், தூத்துகுடி நாடாளுமன்ற வேட்பாளருமான கனிமொழி கருணாநிதி அவர்கள்,தேனி மாவட்டம் கம்பம் நகரில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.I.N.D.I.A கூட்டணியின் தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டும், பாஜக-வின் மக்கள் விரோத போக்கை அம்பலபடுத்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் பஞ்சர் ஹக்கீம் அவர்களின் தலைமையில்,மாவட்ட துணைச்செயலாளர் அம்ஜத் மீரான், MJTS மாவட்ட செயலாளர் தாஹா, கம்பம் நகர செயலாளர் சிராஜ்தீன் மற்றும் நகர துணைச்செயலாளர் இதிரிஸ்,நகர பொருளாளர் சுல்தான் இப்ராஹிம், நகர இளைஞர் அணி செயலாளர் லுக்மான் மற்றும் மாவட்ட கொள்கை விளக்க பேச்சாளர் ஷாஜகான் உட்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments