தேகம் - படிக்கிற கதையில வர கதா பாத்திரமாவே மாறி விடுகிறோம் சில நேரங்களில்
படிக்கிற கதையில வர கதா பாத்திரமாவே மாறி விடுகிறோம் சில நேரங்களில்,,,
அப்டியே வாழ்கிறோம்.....
அவனும் செலினும் கூட இப்படித்தான்....
அவள் கதை சொல்லி அவன் முழுவதுமாக கேட்டதுமில்லை . அவளும் அந்த கதையை முடித்த பாடில்லை.... 🙈
என்னோட அவளுக்கும் புத்தகத்தின் மீது அதீத ஆர்வம்... எத்தனையோ முறை எத்துணையோ கருத்து பரிமாற்றங்கள்....
சில நேரங்களில் கதா பாத்திரத்திற்காக ஊடலில் கூட விவாதம் முடிந்திருக்கிறது...
ஆனாலும் இப்பொழுது வரை என் கதையை அவள் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறாள் ...
ம்ம்ம் சந்தோசம் என்ற ஒரு வார்த்தைக்காக நான் ஒரு அத்யாயமே எழுத வேண்டி இருக்கிறது.... ஆனால் அவள் செவி இன்னமும் என் கதைக்கு செவி சாய்த்துக் கொண்டு தான் இருக்கிறது....
செலின் நான் மிகவும் கொடுத்து வைத்தவள்.
இந்த உரையாடலில் பெரிதாக ஒன்றுமே இல்லை.... ஆனாலும் அந்த வார்த்தைக்காக இரண்டாம் அத்யாயம் எழுதிக் கொண்டிருக்கின்றேன்...
திரவியின் குழலியாகிய நான் ❤️
நன்றாக இருக்கிறாயா? என்றாள்
உனக்குள் இருக்கும் என்னை தேடித்தான் இவ்வளவு தூரம் வந்தேன். நான் நன்றாகத் தான் இருக்கிறேன்..
ஆனால் மன்னித்து விடு என்னால் தான் உன்னை சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை....
உனக்காகத் தான் இவ்வளவு தூரம் வந்தேன்
இப்பொழுதெல்லாம் உறக்கம் என்னிடம் தலை சாய்ப்பதே இல்லை
எனக்கு இப்பொழுது பசிக்கின்றது
ஒரு தேனீர் வாங்கித் தருகிறாயா?
வாகனத்தின் பின் அமர்ந்து உன்னை ஒரு முறையேனும் அனைத்துக் கொள்ளாட்டுமா?
எனக்கு மன்னிப்பு தருவாயா?
என் தொலைபேசியை தொலைத்து விட்டேன்
உன் விரலை...
ஒரு நிமிடம் பொறு
எனக்கு கண்களை நானே துடைத்துக் கொள்கிறேன்.
ஆனால் ஓன்று என்னை விட்டு போய் விடுவாயா? என்ற கேள்வியை மட்டும் உன்னிடம் நான் கேட்கவே மாட்டேன்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்றால் ( ள் ).
A. சத்யா
தமிழ் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ( கவிஞர்)
No comments