• Breaking News

    பாரம்பரிய முறைப்படி நடிகை அமலாபாலுக்கு வளைகாப்பு நடைபெற்றது

     

    நடிகை அமலாபாலுக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் வளைகாப்பு நேற்று நடந்திருக்கிறது. கணவர் ஜெகத் தேசாயுடன் இருக்கும் வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும் அமலாபாலுக்கு எட்டவாது மாதம் தொடங்க இருக்கும் நிலையில், அவரது குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திருக்கின்றனர்.

    தேசாயை கரம் பிடித்ததில் இருந்தே இணையத்தில் அமலாபால் மீது அதிக கவனம் திரும்பி இருக்கிறது. கடந்த அக்டோபர் 26, தனது பிறந்தநாளன்று காதலனை அறிமுகப்படுத்தியவர் அடுத்த சில வாரங்களிலேயே கேரளாவில் திருமணம் முடித்தார்.அடுத்த சர்ப்ரைஸாக திருமணம் ஆன இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் சொன்னார் அமலா. கணவருடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோக்கள், புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இயக்குநர் விஜயுடன் முதல் திருமணத் தோல்விக்குப் பின்பு தனக்குப் பிடித்த சரியான நபருடன் அமலா மணம் முடித்திருக்கிறார் என ரசிகர்கள் வாழ்த்தி வந்தனர்.

    அதேபோல, இவர் நடித்திருந்த ‘ஆடுஜீவிதம்’ படமும் சமீபத்தில் வெளியானது. கர்ப்பமாக இருக்கிறேன் என்று சாக்கு போக்கு சொல்லாமல் சமத்தாக புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆச்சரியப்படுத்தினார் அமலா. இப்போது குஜராத்தில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தி முடித்திருக்கிறார்கள்.

    No comments