• Breaking News

    மயிலாடுதுறை: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது


    பாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் காவல்துறையினரால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வருகின்ற 19 ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலின் போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி வாக்களிக்கவும்,பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் பெரம்பூர் காவல் ஆய்வாளர் தலைமையில்,குத்தாலம் காவல் ஆய்வாளர்,காவல் ஆளினர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கலந்துகொண்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி வழுவூர் மெயின் ரோட்டில் துவங்கி பண்டாரவடை,தத்தங்குடி வழியாக மங்கைநல்லூர் கடைத்தெருவில் முடிவடைந்தது.இதில் 74 காவல்துறையினர் பங்கேற்றனர்.

    No comments