• Breaking News

    தேனி: மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகளுடன் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆலோசனை


    எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தல் சம்மந்தமாக  மாவட்ட ,நகர நிவாகிகள் ஆலோசனை கூட்டம்  மனிதநேய ஜனநாயக கட்சி  மாவட்ட செயலாளர் கம்பம் கரீம் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட துணைச் செயலாளர் அம்ஜத் மீரான்  வரவேற்று இக்கூட்டம் நடத்துவதற்கான நோக்கத்தினை நிர்வாகிகள் மத்தியில் எடுத்துரைத்தார், மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அவர்கள் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் I.N.D.I.A கூட்டணியின் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர்  தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை நேரில் சந்தித்து  தேனி மாவட்டத்தில் நாடாளுமன்ற  தேர்தல் பற்றி வியூகத்தை அமைத்து அவர்களை வெற்றி பெற வைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய பணிகளை குறித்து வேட்பாளரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நிர்வாகிகள் மத்தியில் எடுத்துரைத்தார் இக்கூட்டத்தில் நிர்வாகிகளின் கருத்துக்கள் அடிப்படையில்  தேனி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரை தேர்தல் வரை நியமனம் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது,நிர்வாகிகளின் பரிந்துரையின்படி பஞ்சர் ஹக்கீம் அவர்கள் பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்,இறுதியாக நகரச் செயலாளர் சிராஜுதீன் நன்றியுரை கூறி கூட்டம் நிறைவு பெற்றது.

    இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஷ்ரப் ஒலி,மாவட்ட கொள்கை விளக்க பேச்சாளர் ஷாஜகான் நகர பொருளாளர் சுல்தான் இப்ராஹிம், நகர இளைஞர் அணி செயலாளர் லுக்மான், நகர துணைச் செயலாளர் இத்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,


    தீர்மானங்கள்:-

    1,குடும்ப பிரச்சினை காரணமாக தாக்குதலுக்கு உள்ளான நம்முடைய நகரதுணைச்செயலாளர் சபியுல்லா மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

    2,தேனி நாடாளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது குறித்து திட்டமிடப்பட்டது.

    3,தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களின் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணி குழு நிர்வாகிகள் தொடர் பிரச்சாரமும்,துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக மக்கள் கூடும் இடங்கள், பள்ளிவாசல்கள்,கோவில்கள்,மார்க்கெட் என்று அனைத்து இடங்களிலும் விநியோகம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

    No comments