• Breaking News

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி


    தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு இருதய பிரச்சனை தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பரிசோதனைக்கு ஏற்றார்போல் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    No comments