• Breaking News

    நடிகர் தனுஷ் எனது மகன் என வழக்குகளைத் தொடர்ந்தவர் காலமானார்

     

    தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தனுஷ், சிறுவயதில் தொலைந்து போன  தனது மகன் என்று மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் திடீரென உரிமை கொண்டாடினார். தனது மனைவி மீனாட்சியுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தினார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தம்பதிகள் தனுஷ் தங்கள் மகன் தான் என்று மன்றாடி வருகின்றனர். ஆனால் இதை மறுத்து தனுஷ் தரப்பில் வாதிடப்பட்டது. தனுஷை தங்கள் மகன் என்று கூறுவதற்கான எந்த ஆதாரத்தையும் அந்தத் தம்பதிகளால் கொடுக்க முடியவில்லை.இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கதிரேசன் உடல் நலம்  பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக  மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  அவரது மரபணு எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும், அது தனுஷ் குறித்த வழக்கில் உதவியாக இருக்கும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்திருந்தார். மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை கதிரேசன் உயிரிழந்துள்ளார். இது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    No comments