• Breaking News

    தேடல்..... திரவியின் குழலி கவிதை தொகுப்பில் இருந்து......

     

    தேடலில் அவளும் நானும்

     எங்கள் காதலின் வயது இன்றுடன் ஏழு மாதம்

     இந்த ஏழு மாதத்தில் எத்துணை எத்துனை மாற்றங்கள்

     விடிய விடிய பேசி,, விடிந்தது கூட தெரியாமல்,, பேசி மகிழ்ந்த நாட்கள்.

     புகைப்படங்கள் பதிந்த உடனே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட தருணங்கள்...

     உன் குரல் அறிய வேண்டும் என்று உன் வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு,

    உன் தந்தையின் குரல் கேட்டு தொடர்பை துண்டித்தது...

     எதிர்காலம் குறித்த பேச்சுக்கள்

     நம் காதலை உன் தாயாரிடம் பகிர்ந்து,,

     உன் நட்பிடம் நான் வாங்கிய பூசை,,

     உன் சகோதரன் ஒரு புறம்,,

     உன்னை தேடி உன் வீட்டு வாசல் படி ஏறி உன்னை காணாமல் திரும்பியது,,

     உன் வேலை உன்னை கட்டி இழுக்க,

    ஆனாலும் நீ என் பக்கமே சாய்ந்து கொண்டாய்.

     இவை யாரும் கடந்து நம் காதல் நகர்ந்தது..

     இதையாவது மறக்க முடியுமா?

     ஆனால் இன்று எல்லாம் யாரும் களவாடிய பொழுதுகளாக இப்போது மாறியது ஏன்?

     முகம் அறியாமலும் முகவரி தெரியாமலும்  ஒருவரை ஒருவர் நேசித்தது எல்லாம் இன்றும் உயிருக்குள் ஒலிக்கின்றதே!!

     காணாமல் போய்விட்டோம் ஆனால் இன்றும் ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டேதான் அலைகின்றோம் அகதிகளாய்..

     உன்னை என்னிலும் என்னை உன்னிலும்

     நம் தேடல் என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

     தேடல் என்பது இனிமையானது...

    எங்கே இருக்கிறாய்? பறவையாய் அலைந்து திரிந்து கொண்டே இருக்கின்றேன் உன்னை தேடி!!.


    ஆசிரியர்

    A. சத்யா

     திரவியின் குழலி கவிதை தொகுப்பில் இருந்து.

    No comments