திரவியின் குழலி..... திரவியின் குழலி கவிதை தொகுப்பு என்னும் புத்தகத்திலிருந்து
படைத்தவள் எழுதுகிறேன்
திரவியத்தின் அச்சில் சுழன்று சுழன்று அதன் மையத்திலேயே அடங்கிவிடும் குழலி நான்.
குழலியாகிய நான் என் கற்பனைக்காகவும் காதலுக்காகவும் படைக்கின்ற படைப்பு இது..
இந்த தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் என் உணர்வு சார்ந்தது என் விருப்பம் சார்ந்தது
என் காதல் சார்ந்தது
காதல் ஒரு பாதி காமம் மறு பாதி என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் பார்த்து பார்த்து ஒரு சிற்பியானவள் சிலையை செதுக்குவது போல என் கவிதைகளைப் படைத்திருக்கிறேன்.. இல்லை விதைத்திருக்கிறேன்..
பல வரிகள் என்னை ஆர்ப்பரித்தன,பல வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தன சில வரிகள் என்னை சிறை படுத்தியது.
அந்த உணர்வுகளை உங்களோடு பகிரவே இத்தொகுப்பு.
இரவு நேர ஜாமத்திலும்,, விடியற்காலையின் குளிரிலும்,,பனித்துளி படரும் வேலையில்,,
என் காதல் தொடங்குவதாய் ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து ஒவ்வொரு வார்த்தையிலும் என் உணர்வு கலந்து இருக்கிறது.
நான் ஆர்ப்பரித்த தருணங்கள்
நான் கண் கலங்கிய நிமிடங்கள்
என் தனிமை
என் பயணம்
என் காதல்
என் முற்றுப்புள்ளி
என நானும் என் பேனாவும் காகிதமும் ஒரு குவளை தேநீர் சேர்ந்து இத்தொகுப்பினை உங்களுக்காக படித்திருக்கிறோம்.
திரவியின் குழலி கவிதை தொகுப்பு என்னும் புத்தகத்திலிருந்து..
ஆசிரியர் A.சத்யா
தமிழ் துறை உதவி பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்
விளக்கம் சொல்லி விளக்கம் சொல்லி தக்கவைக்கும் உறவு நெடுநாள் நீடிக்காது..,
ReplyDelete