தேவகோட்டை: இராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா
சிவகங்கை மாவட்டம் ,தேவகோட்டை இராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இராம்நகர் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருள்பணி ஆரோக்கியசாமி தலைமையில் இராம்நகர் பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ், அருள்பணி இன்னாசிமுத்து , திருச்சி புனித வளனார் கல்லூரி பேராசிரியர் அருள்பணி வில்சன் ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்கள்.இதில் யேசுவின் உயிர்ப்புக் காட்சியை இப்பங்கின் பிரிட்டோ இளையோர் இயக்கம் சிறப்பாக வெளிப்படுத்தினர்.இராம்நகர் பங்கு மக்கள் அனைவரும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியவாறு ஞானஸ்நானம் உறுதிமொழியை புதுப்பித்துக் கொண்டனர்.இதில் ஏராளமான இராம்நகர் இறைமக்கள் மற்றும் கிளைக் கிராம இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.
No comments