அடிதடியில் இறங்கிய 'சுந்தரா டிராவல்ஸ்' பட நடிகை ராதா..... அடுத்தடுத்த புகாரால் போலீஸார் அதிர்ச்சி.....
சென்னை நெற்குன்றம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன்(47). இவர் எல்ஐசி ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முரளி கிருஷ்ணன் கூறியதன் பேரில் 'சுந்தரா டிராவல்ஸ்' பட நடிகை ராதா, அவரது நண்பர் துவார கேஷிஸ்சிடம் பிட்காயினில் கடந்த 90 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். இன்று வரை பணத்தை திருப்பிக் கொடுக்காமல் துவாரகேஷிஸ் ஏமாற்றி வந்ததால் நடிகை ராதா இதுகுறித்து முரளி கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த 27-ம் தேதி முரளி கிருஷ்ணா சூளைமேடு பகுதியில் உள்ள தனது நண்பர் மைக்கேல் அலுவலகத்திற்கு சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 'சுந்தரா டிராவல்ஸ்' பட நடிகை ராதா மற்றும் அவரது தாய் பவானி, மகன் தருண் உள்ளிட்ட சிலர் பணம் விஷயம் தொடர்பாக முரளியிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால் ஆத்திரமடைந்த நடிகை ராதா மற்றும் அவருடன் வந்தவர்கள் முரளி கிருஷ்ணனை அடித்து கீழே தள்ளியதில் தலையில் காயம் ஏற்பட்டது.இதனால் முரளியை அவரது நண்பர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து பின்னர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
இதையடுத்து நடிகை ராதா அவரது தாய், மகன், உள்ளிட்டோர் மீது வடபழனி காவல் நிலையத்தில் முரளி கிருஷ்ணா புகார் அளித்தார்.இதன்பேரில், போலீஸார் நடிகை ராதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி பார்க்கிங் பிரச்சினையில் பிரான்சிஸ் ரிச்சர்ச் (22) என்ற இளைஞரை நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் தாக்கியதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ராதா மீது புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நடிகை ராதா மீதான அடுத்தடுத்த புகாரால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
No comments