தற்போது நடப்பது மோடியின் அரசு அல்ல; அதானியின் அரசு - கோவையில் ராகுல் காந்தி பேச்சு
தற்போது நடப்பது மோடியின் அரசு அல்ல; அதானியின் அரசு என கோவை பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய துறைகள் அனைத்தும் அதானிக்கே அளிக்கப்படுகிறது; தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ்நாட்டுக்கு வருவதை எப்போதும் விரும்புகிறேன். அதானி குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசியதும் எனது எம்பி பதவி பறிக்கப்பட்டது. எம்.பி. பதவி மட்டுமின்றி எனது வீட்டையும் பறித்தனர் ; லட்சக்கணக்கான தமிழ் மக்கள் எனக்காக வீட்டை திறந்து வைப்பார்கள்; நாட்டு மக்கள் பலரின் இதயங்களில் வாழ்வதால் வீட்டை பறித்த போது நான் கவலைப்படவில்லை. மோடியிடம் தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.யாரை எப்படி மதிக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனது மூத்த அண்ணன் மு.க.ஸ்டாலின்; வேறு எந்த அரசியல் தலைவர்களையும் நான் அண்ணன் என அழைத்ததில்லை. இங்கு தோசை பிடிக்கும் என்று கூறும் மோடி இங்கிருந்து சென்றதும் தமிழ் மீது தாக்குதல் நடத்துகிறார் தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவிற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சென்றுள்ளது, பலரை மிரட்டி பணம் பறித்துள்ளனர். தேர்தல் பத்திர ஊழல் மற்றும் பாஜகவின் வாஷிங் மெஷின் பற்றி மு.க.ஸ்டாலின் பேசினார்; அது எப்படி நடக்கிறது என விளக்குகிறேன்; நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை. நாட்டின் இளைஞர்களில் 83 சதவீதம் பேர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சியை விட பொருளாதார ஏற்றத்தாழ்வு இப்போது அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். என பேசினார்.
No comments