போர் முனையின் கூர்வாள்..... ஆகப்பெரும் காதலும் கெஞ்சும் கொஞ்சும் கொஞ்சம் புத்தகத்திலிருந்து....
கூர் குத்தி
குருதி சிந்திய
என் குற்றமில்லா கூர்முனையே
உனை பிடித்தெழுத
நான் என்ன தவம் செய்தேனோ?
இந்த பேனா சாதாரண கூர் குத்தி அல்ல
இது ஒரு போர் வீரனின் கூர் வாள்
அந்த அசோக சின்னத்தை தாங்கி நிற்கும் வாள் போல
இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் இந்திய எல்லையில் காத்துக் கொண்டிருந்த ஓர் சிங்கத்தின் கர்ஜனை தான் அந்த போர் வீரன்.
அந்த வாள் தாங்கிய கைகளில் பிடித்தெழுதிய இந்த கூர்முனையே புகைப்படமாய் இப்புத்தகத்தில் சமர்ப்பிப்பதில்
பெருமகிழ்ச்சி அடைகின்றேன்..
தெளிவான பார்வை
தீர்க்கமான சிந்தனை
சிந்தித்து செயல்படும்
செயல்வீரர்
இரண்டு நிமிட உரையாடலில் பளிச்சென்று மனதில் ஒட்டிக் கொள்ளும் சிநேகம்
என்றும் எளிமையே அரிதாரம் இவருக்கு
இந்தப் போர் வீரனுக்கு
இந்த வரிகள் சிறு இளைப்பாறல்....
A. சத்யா
தமிழ்துறை உதவிப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.
No comments