• Breaking News

    சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.840 உயர்வு

     

    தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டதால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.840 உயர்ந்து ரூ.52,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    No comments