• Breaking News

    டியூசன் சென்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 11 வயது சிறுவன் கைது

     

    உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆறு வயது சிறுமியை 11 வயது சிறுவன் கடந்த சனிக்கிழமையன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சிறுமியின் தந்தை, உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்," டியூசன் சென்ற எனது மகளை சிறுவன் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இரவு 7.30 மணியளவில் அவள் வீட்டை அடைந்த போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. அப்போது அவள் நடந்த விஷயங்களைக் கூறினாள். குற்றம் செய்த சிறுவனை அவளுக்குத் தெரியும். அவன் குறித்த விவரத்தையும் அவர் கூறியுள்ளார். இதன் பின் எங்கள் மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளோம்" என்றார்.இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும், பாதிக்கப்பட்ட சிறுமியும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராமத்தில் போதுமான போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments