திருப்பூர்: மாணவர்களை கழிவறை கழுவ வைத்த 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

 

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  படித்து வரும்  இரண்டு மாணவிகளை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் இரண்டு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Post a Comment

0 Comments