நாகை: கீழ்வேளூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1,12,400 பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மேலப்பிடாகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஸ்ரீரங்கபாணி தலைமையில் போலீசார் குணசேகரன் மற்றும் ராஜேந்திர சாகு வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த திருக்குவளை தாலுக்கா கொளப்பாடு அஞ்சல் செனையன்குடி தெரு சேர்ந்த ராஜசேகரனிடம் சோதனை செய்தனர்.அதில் அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 1,12,400 /- (ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய் இருந்தது தெரிய வந்தது இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்துனர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் ரேணுகாதேவியிடம் பணத்தை ஒப்படைத்தனர்.பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கீழ்வேளூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
No comments