• Breaking News

    மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் 10 கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர்

     

    தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,625 வேட்பாளர்களில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த பட்டியலில் மத்தியப்பிரதேச முன்னாள் காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தின்  மகன் நகுல்நாத்  717 கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார்.  ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 662 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது கோடீஸ்வர வேட்பாளராக உள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவரும், சிவகங்கை  தொகுதி பாஜக வேட்பாளருமான தேவநாதன் யாதவ் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 304 கோடி.வேலூரில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் 152 கோடி சொத்து மதிப்புடன் ஆறாவது இடத்திலும், கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 135 கோடி சொத்து மதிப்புடன் ஏழாவது இடத்திலும் உள்ளனர். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 96 கோடி சொத்து மதிப்புடன் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் உள்ள தேவநாதன் யாதவும், கார்த்தி சிதம்பரமும் மிகவும் பின் தங்கிய தொகுதியான சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments