• Breaking News

    மும்பை அணியுடன் இணைந்தார் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்...... மகிழ்ச்சி மழையில் ரசிகர்கள்......

     

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடிய அவர் அதற்கு பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக எந்த தொடரிலும் விளையாடாமல் இருந்து வருகிறார்.

    மேலும் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்கிற குடல் இறக்க பாதிப்பிற்காக முன்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து நீண்ட நாள் ஓய்விற்கு பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.காயத்திலிருந்து மீண்டு வந்த சூர்யகுமார் யாதவ் தற்போது முழு உடல் தகுதியை எட்டிய நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். அங்கு மும்பை அணி வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மும்பை அணியின் அடுத்த போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவரது வருகை நிச்சயம் அணிக்கு வலு சேர்க்கும். தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள மும்பை அணியின் ரசிகர்கள் தற்போது இவரது வருகையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    No comments