• Breaking News

    நாகை மாவட்டம் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் சமூக ஆர்வலர் ஸ்ரீரங்கபாணிக்கு நம்ம ஊரு நட்சத்திரம் விருது


    தாய்த்தமிழ் அகாடமி மக்கள் ஊடக மையம் மதிமுகம் தொலைக்காட்சியில் இணைந்தும் நடத்தும் கோவைப்புதூரில் உள்ள வி எல் பி கல்லூரியில் நடைபெற்றது இந்த விழாவில் மக்கள் ஊடக மையம் தலைவர்  சித்ரவேல் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி தமிழ் நகைச்சுவை பேச்சாளர்நாகமுத்து பாண்டியன் கலந்து கொண்டு சிறந்த சமூகப் பணிக்காக நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுனர் (பயிற்சிகள் ), மற்றும் சமூக ஆர்வலர், அவர்கள் பொதுநலம் சேவையில்அயராது உழைத்துமக்கள் நல பணியில்தம்மை ஈடுபடுத்திவரும் ஸ்ரீரங்கப்பாணி அவர்களுக்கு நம்ம ஊரு நட்சத்திரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது,இந்த விருது பெற்ற அவருக்கு நாகை மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்  முருகேசன் அவர்கள்,உதவி திட்ட அலுவலர்கள் மேலும் மேலும் சிறந்த சேவை செய்ய வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து அரசு துறை சார்ந்தவர்கள், தொண்டு நிறுவனங்கள், மகளிக் குழு உறுப்பினர்கள் மற்றும் சில அமைப்பின் மூலம் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.


    நாகை மாவட்டத்தில் இருந்து செய்தியாளர் சக்கரவர்த்தி.க

    No comments