• Breaking News

    டிடிவி தினகரனை பார்த்து பயந்தது உண்மைதான். அவரது வீட்டு காவல் நாயாக இருந்திருக்கிறோம் - ஆர்.பி.உதயகுமார்

     

    மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணசாமி, திமுக சார்பில் தங்க தமிழ் செல்வன், அமமுக சார்பில் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். விஐபி தொகுதியான தேனியில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    வாடிப்பட்டியில் பொதுமக்களிடையே பேசிய அவர், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன். அவர் மறைந்த பிறகுதான் தமிழ்நாட்டில் தலைக்காட்ட ஆரம்பித்தார். ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் நோட்டு கொடுத்து மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றிப் பெற்று, அந்த தொகுதி பக்கமே போகவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அவருடைய வீராப்பு எல்லாம் தேனி தொகுதியில் எடுபடாது.தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிடிவி தினகரன், என்னை பபூன் என்று கூறியிருக்கிறார். நான் பபூன் என்றால் நீங்கள்தான் வில்லன். இந்த பபூனால் யாருக்கும் எந்த தீமையும் ஏற்படாது. படத்தின் கிளைமேக்ஸில் பபூன்தான் வெற்றிப் பெறுவான். ஆனால், வில்லன் ஜெயிலுக்கு போவான். அதனால பபூன் என்று சொல்வது, பூச்சாண்டி காட்டுற வேலை எல்லாம் வேண்டாம். உங்களிடம் இருந்து விடுதலை பெற்று, எடப்பாடியார் தலைமையில் அதிமுக தொண்டர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.

    ஜெயலலிதா இருந்த காலத்தில் டிடிவி தினகரனை பார்த்து பயந்தது உண்மைதான். டிடிவி வீட்டு காவல் நாயாக இருந்திருக்கிறோம். இப்போது நீங்கள் காட்டுகிற பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். எங்களை சீண்டிப் பார்க்க வேண்டாம். அதை மீறி சீண்டினால், இரண்டு கோடி அதிமுக தொண்டர்கள் சிங்கமாக சீறி விஸ்வரூபம் எடுப்பார்கள்" என்று எச்சரித்தார்.

    No comments