• Breaking News

    மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு


    நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் நிலையில் தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு , விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படுகின்றன அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் செல்பி பாயிண்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செல்ஃபி பாயின்டில் கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் காவல்துறை அதிகாரிகள் செல்பி எடுத்துக் கொண்டனர் தொடர்ந்து கூட்டுறவுத்துறை வேளாண்துறை வருவாய்த்துறை என்று ஒவ்வொரு துறை அதிகாரிகள் ஊழியர்கள் தனித்தனியாக செல்பி பாயின்ட்டில் செல்பி எடுத்து பதிவு செய்து கொண்டனர்.

    No comments