• Breaking News

    மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


    தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்பு பொறுப்பேற்ற திமுக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்ட பணிகளை துவங்கி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் பால்பண்ணை பகுதியில் ரூபாய் 114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது ‌‌. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பிறகு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் ஆனது நிறைவு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட தரைத்தளம் மற்றும் ஏழு மாடி கட்டிடமாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஆட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டார். இதற்காக நேற்று  சென்னையில் இருந்து செந்தூர் ரயிலில் சீர்காழி வந்த நிலையில் அங்கிருந்து திருவெண்காடு பகுதியில் தங்கி  மயிலாடுதுறை பகுதிக்கு வருகை தந்து ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் ‌. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் காவல்துறையின் மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். அப்போது அமைச்சர்கள் மெய்யநாதன் , ரகுபதி , கே.என். நேரு , அன்பில் மகேஷ் பொய்யாமொழி , டிஆர்பி ராஜா , ஏ.வ.வேலு , எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் உடன் இருந்தனர். 

    பின்னர் தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் ரூபாய் 655.44 கோடி மதிப்பீட்டில் 12, 653 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் கரங்களால் வழங்கினார். அதுமட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் நிறைவடைந்த 71 கட்டிடங்களை திறந்து வைத்தார். முன்னதாக முதலமைச்சருக்கு அமைச்சர் மெய்யநாதன் செங்கோல் வழங்கினார்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு முன்னிட்டு திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உள்ளிட்ட 6 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் , 8 ஏடிஎஸ்பிக்கள் மற்றும் மயிலாடுதுறை ,நாகை, திருவாரூர், திருச்சி ,புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 1745 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது‌.

    No comments