செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த நிலையில் தற்பொழுது தேர்தல் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் மேற்கூரையில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எறிந்தன. பிறகு தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் S. சஞ்சீவ்
No comments