• Breaking News

    ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு டாடா காட்டிய நடுவர்கள்

     

    சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. நான்கு சீசன்களை முடித்து ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் மாறினாலும் கோமாளிகளும் நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்த செஃப் தாமு, வெங்கடேஷ் பட் அடுத்த சீசன்களிலும் தொடர்வார்கள். கோமாளிகள் மட்டுமல்லாது தாமு, வெங்கடேஷ் பட் இருவரின் நகைச்சுவையும் நிகழ்ச்சிக்குப் பெரும் பலம் என்றே சொல்லலாம்.

    ’குக் வித் கோமாளி’யின் ஐந்தாவது சீசனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சமயத்தில்தான் வெங்கடேஷ் பட் இனிமேல் அந்த நிகழ்ச்சியில் தொடரப்போவதில்லை என்று சொல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.இவரைத் தொடர்ந்து செஃப் தாமும் நிகழ்ச்சியில் இனி தொடரப்போவதில்லை எனவும் அதற்கு பதிலாக வெங்கடேஷ் பட்டும் தானும் இணைந்து சுவாரஸ்யமான புது நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்க இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் அவ்வப்போது வெங்கடேஷ் பட் ஸ்ட்ரிக்ட்டாக நடந்து கொண்டாலும் தாமு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி நிகழ்ச்சியை கலகலப்பாக்குவார். ‘அப்பாங்ங்..’ என ரசிகர்கள் அவரை செல்லமாகக் கூப்பிட்டு வந்தனர். அப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் இல்லாமல் வரவிருக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியைப் பார்க்கத் தோன்றவில்லை என பலரும் சோகமாக கமென்ட் செய்து வருகின்றனர்.

    No comments