• Breaking News

    கிராமத்து மண்வாசனையை கண்முன் நிறுத்திய அரசு பள்ளி மாணவர்கள்; குருமனாங்குடியில் நடைப்பெற்ற பள்ளி ஆண்டு விழாவில் கிராமிய பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்


    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த குருமனாங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. 1 முதல் 8 ம் வகுப்புவரை உள்ள இப்பள்ளியின் ஆண்டு விழா நடைப்பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரா தலைமையில் நடைப்பெற்ற விழாவில் கீழ்வேளூர் ஒன்றியக் குழு தலைவர் வாசுகி நாகராஜன், கீழ்வேளூர் காவல் ஆய்வாளர் ப்ராங்ளின் வில்சன், வட்டாரக்கல்வி அலுவலர் சிவக்குமார், ஊராட்சி மன்றத்தலைவர் நேரு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் துரை.பாஸ்கர் ஆகியோர் கலந்துக் கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

     தொடர்ந்து மாணவ , மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. மண் மணம் மாறாத கிராமிய பாடல்களுக்கு அச்சு அசலாக கிராமிய அடைகளை உடுத்தி மாணவ, மாணவிகள் நடனமாடி அசத்தினர். மாணவிகள் போட்ட ஆட்டத்தை பார்த்து பார்வையாளர்களாக இருந்த பெண்களும் நடனமாடி உற்சாகம் அடைந்தனர். இதில் குருமனாங்குடி, தென் ஓடாச்சேரி, சங்கமங்கலம், பூலாங்குடி, எரவாஞ்சேரி  கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர்கள் பாஸ்கர், சண்முகப்பிரியா, ஜாக்குலின் ஜனவா மேரி, சம்பத்குமார், அருள்சக்தி, நித்யா, சத்துணவு அமைப்பாளர் முருகையன் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்தனர், அரசு பள்ளி ஆண்டு விழாவில்  மண்மணம் மாறாத கிராமிய பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகமாக நடனமாடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் வரவேற்பையும் பெற்றுள்ளது.


    நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி. க

    விளம்பர தொடர்புக்கு 9788341834

    No comments