கோபி அருகிலுள்ள நம்பியூர் பேரூராட்சியில் குடிநீர் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைக்க நம்பியூர் பேரூராட்சி தலைவர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சி பகுதியில் 6 வார்டுகளில் குடிநீர் வசதிக்காக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி அமைக்க நம்பியூர் பேரூராட்சி தலைவரும் , நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளர் மெடிக்கல் ப.செந்தில்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நம்பியூர் பேரூராட்சி துணை தலைவர் தீபா தமிழ்செல்வன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், நந்தகுமார், சுப்ரமணியம், நாகேஸ்வரி, கலையரசி மனோகரன் மற்றும் வார்டு செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments