• Breaking News

    ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆண்டி இண்டியன் படத்தை வாங்கிய அம்பானி

     

    சன் டிவியில் திரை விமர்சனம் பார்த்து படம் பார்க்க சென்ற காலம் போய் தற்போது யூடியூப் விமர்சனங்களை பார்த்து படத்துக்கு செல்லும் காலம் வந்துவிட்டது. அந்த அளவுக்கு யூடியூப் விமர்சனங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அதிலும் யூடியூப்பில் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை செய்தே பேமஸ் ஆனவர் தான் ப்ளூ சட்டை மாறன். இவருக்கு ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் அதை டார்டாராக கிழித்து தொங்கவிட்டு விடுவார்.

    குறிப்பாக விஜய், அஜித், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை கடுமையாக விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கியதோடு, ரசிகர்களின் எதிர்ப்புகளுக்கும் ஆளாகி இருக்கிறார். அதேவேளையில் ஒரு படம் நன்றாக இருந்தால் அதை அங்கீகரிக்கவும் அவர் தவறுவதில்லை. குறிப்பாக இவர் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தியேட்டருக்கு செல்லும் கூட்டமும் உண்டு.இவரது படங்களை சரமாரியாக விமர்சனம் செய்வதை பார்த்து, திரைத்துரையினர் பலரும் அவருக்கு சவால்விட்டது. நீங்கள் ஏன் ஒரு நல்ல படத்தை இயக்க கூடாது என்பது தான். அந்த சவாலை ஏற்று அவர் இயக்கிய திரைப்படம் தான் ஆன்டி இண்டியன். இப்படத்தை ஆதம் பாவா என்பவர் தயாரித்து இருந்தார். இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர்கள் இப்படத்தை பார்த்து பாராட்டினாலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை.பொதுவாக ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனால் ஒரு மாதத்திற்குள் ஓடிடிக்கு வந்துவிடும். ஆனால் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் திரைப்படம் ரிலீசாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னர் ஓடிடிக்கு வந்துள்ளது. இப்படம் அம்பானிக்கு சொந்தமான ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் தற்போது ஸ்டிரீம் ஆகி வருவதாக ப்ளூ சட்டை மாறனே தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஓடிடியில் இப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    No comments