பொன்னமராவதி அருகே அரசமலையில் ரோஸ் தொண்டு நிறுவனம்,டி.டி.எச் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அரசமலை கிராமத்தில் ரோஸ் தொண்டு நிறுவனம்,டி.டி.எச் தொண்டு நிறுவனம் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தினர். அரசமலை கிராமத்தில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன்,அரசமலை ஊராட்சி மன்றத்தலைவர் பழனிவேல் ஆகியோர் தலைமை தாங்கினார்.தொண்டு நிறுவன பணியாளர் அகிலா முன்னிலை வகித்தனர்.சமுதாய ஒருங்கிணைப்பாளர் சாத்தனூர் புவனேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.
பின்னர் தொடங்கிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வில் ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன் பேசுகையில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்,பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும், நம் நாட்டின் முக்கிய தொழிலான வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிக வேலை வாய்ப்பைக் கொடுக்கும் தொழிலாக ஆயத்த ஆடை தொழிலே ஆகும் எனவும். படிக்கும் பருவத்திலே வளரிளம் பெண்கள் அதிக அளவில் பஞ்சாலைகளில் வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்,பெண் உரிமைகளை பாதுகாப்பது, பாலின பாகுபாட்டைக் களைப்பது,பெண் குழந்தைகளின் சுய பாதுகாப்பு, தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது,பெண்கள் கல்வியை ஊக்குவிப்போம், பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்துதல்,குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 பெண்கள் பாதுகாப்பு எண்கள்181 மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 பற்றிய விழிப்புணர்வை ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன் கிராம மக்களிடையே விளக்கி கூறினார். மேலும் பெண்களுக்கு கோலப்போட்டி,சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் சுபலெட்சுமி, சங்கீதா, மஞ்சு பிரபா, சரண்யா, அழகுமணி,சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments