காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். ரூ. 491 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை காணொளி வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார். காரைக்கால் மற்றும் ஏனாம் மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில் புதிதாக ஜிப்மர் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.
இதில் காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி, புதுச்சேரி ஏனாம் பகுதியில் ரூ.91 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையையும் திறந்து வைத்தார்.
ஏனாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையானது புதுச்சேரி அரசால் வழங்கப்பட்ட 0.9 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 90 படுக்கைகள், 20 ஐசியூக்கள் மற்றும் மூன்று அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments