நாகை அருகே நடுக்கடலில் 2 மீனவர்கள் கொலை
நடுக்கடலில் அக்கரைப்பேட்டை – கீச்சாங்குப்பம் மீனவர்கள் மோதலில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் ஆத்மநாபன், சிவனேசெல்வம், காலஸ்திநாதன் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த 10 பேர் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றபோது பைபர் படகில் மீன்பிடி வலை சிக்கியது. பைபர் படகில் மீன்பிடி வலை சிக்கி சேதமானதால் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.மோதலில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவனே செல்வம், காலஸ்திநாதன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் மோதலில் இடது கையில் முறிவு ஏற்பட்டு ஆத்மநாபன் என்பவர் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பைபர் படகு சேதமாகியுள்ளது. இந்நிலையில் மீனவர்கள் மோதலில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments