இன்றைய ராசிபலன் 05-02-2024
மேஷம் ராசிபலன்
உங்களுக்குத் தோன்றும் உள்ளுணர்வுகள் அனைத்தும் உறுதியாக நடந்து வருகிறது. உங்கள் மனதில் தோன்றும் சில விஷயங்கள், இதை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கலாம். அவற்றை, கொஞ்சமாக தெரிவு செய்யுங்கள். நீங்கள் மனக்கசப்பு கொண்ட ஒரு நபரிடம் உள்ள குறைகளைச் சரி செய்யுங்கள். அந்த குறைகள் குறித்து நீங்கள் சிந்தித்து, அவரிடம் உண்மை இல்லை என்று தெரிந்து கொண்டால், அதை மேம்படுத்த அவருக்கு உதவுங்கள்!
ரிஷபம் ராசிபலன்
இன்று, முக்கியமில்லாத விஷயங்களை ஒதுக்கி வைத்துவிடுங்கள். ஏனென்றால், உங்களது ஆற்றல் தீர்கமான விஷயங்களுக்கு செலவிடப்பட வேண்டும். இன்று, உங்களது ஆற்றலைத் சிறப்பாகப் பயன்படுத்த தேர்வு செய்யுங்கள். உங்களது விருப்பங்களை ஆராய்ந்து, அதிலிருந்து சிறந்தவற்றை தேர்வு செய்யத் தயங்காதீர்கள். உங்களுக்கு சவுகரியமாக இருக்கும் மண்டலத்தின் எல்லையிலிருந்து வெளியேறத் தயாராக இருங்கள். அடுத்த சில நாட்களில், இது நிச்சயமாக உங்களுக்கு நன்மை பயக்கும்.

மிதுனம் ராசிபலன்
உங்களது கோபம் உங்களை தோற்கடித்து விடுகிறது. உங்கள் வாழ்நாள் முழுவதும் சில சிக்கலான நபர்களை சந்திக்கிறீர்கள். அவர்களின் ஒருசில தந்திரங்கள் உங்களை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டது. இந்த சூழலில், ஒரு பொறுப்பான தெரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பொறுமையை ஒருபோதும் இழக்காதீர்கள். மற்றவர்களை ஏமாற்றும் விஷயங்களை செய்யவேண்டாம். நீங்கள் நிறைய விஷயங்களை செய்து முடிக்கவில்லை என்பதைக் பொருட்படுத்தாமல், விஷயங்களைச் சிறப்பாகச் செய்வதில் மட்டுமே உங்கள் நேரத்தையும், சக்தியையும் மையமாகக் கொள்ளுங்கள்.

கடகம் ராசிபலன்
படைப்பாற்றல் இன்றுசிறப்பாகச்செயல்படுகிறது. இதை நீங்கள் இன்று அல்லது இந்த வாரத்திற்குள் சிறிது நேரம் செலவிட்டு அதை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் தேவைப்படும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள். இன்று உங்கள் உடல்நலம் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துங்கள். இதற்காக மற்றவர்களிடம் உதவி கேட்க வெட்கப்பட வேண்டாம். இந்த நேரத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுடன் இருப்பார்கள் என்பதால் மகிழ்ச்சியாக இருங்கள்.

சிம்மம் ராசிபலன்
சமீபத்தில் ஏதேனும் சிந்தனைகள் உங்கள் மனதில் காலதாமதமாக தோன்றுகிறதா? புதிதாக ஏதாவது ஒன்றை புதியதாக செய்ய வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு மேலோங்குகிறதா? இப்போது இதைத் தொடங்க சிறந்த நேரமாக இருக்கும். மேலும், அவைகள் சரியான நிலையில் கனகச்சிதமாக பொருந்துவதாகத் தோன்றும். புதிய தொடர்புகள் அமைய வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் உங்களிடம் தான் உள்ளது. பிரபஞ்சத்தால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும்.

கன்னி ராசிபலன்
உங்களது ஆக்கபூர்வமான யோசனைகளும், கடின உழைப்பும் வரும் நாட்களில் அங்கீகரிக்கப்படும். மேலும், இது உங்களுக்கு அதிமுக்கியமானதாகவும், பாராட்டப்படதக்கதாகவும் அமையும். இந்த வெற்றியைத் தொடர்வதற்கு, நிலைத்தன்மை மிகவும் முக்கியமானது. எதிர்மறை சிந்தனைகளோடு குடிகொள்வதில்லை என தெரிவு செய்து கொண்டு, ஒவ்வொரு கணப்பொழுதின் அழகையும் ரசியுங்கள். இன்று, துணிந்து ஒரு செயலில் இறங்கும் நிலை, உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. மேலும், புதிய வாய்ப்புகளைத் பெறுவதற்கு நீங்கள் தயாராக இருப்பீர்கள். சவால்களைக் கண்டு விலகிச் செல்ல வேண்டாம்.

துலாம் ராசிபலன்
கடந்த காலத்தில் நடந்தவை அல்லது எதிர்மறையான விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள பலவீனமான எண்ணங்களை ஒதுக்கி விட்டு, வாழ்க்கைக்குப் பயனளிக்கும் நல்ல காரியங்களைச் செய்யுங்கள். உங்களது உணர்ச்சிகள் மற்றும் ரகசியங்களை மற்றவர்களை நம்பி கூறுவதற்கான நாள் இது இல்லை. திடீரென உங்கள் இதயம் உடைந்து போகலாம், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் உங்களுடன் இருந்தால், அவர்கள் உங்களுக்கு அதிகளவிலான மகிழ்ச்சியை அளிப்பார்கள்.

விருச்சிகம் ராசிபலன்
நடந்தது நடந்தது விட்டது. இப்போது, நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். அன்பு அதனுடைய புகலிடத்தை இப்போது உங்களது மனதில் கண்டறிந்துள்ளது. கடந்த கால தவறுகளையும், சாத்தியமான அனுபவங்களையும், நேர்மறையான அனுபவங்களாகக் காணுங்கள். நீங்கள் இன்று தயவாக உணர்கிறீர்கள். உங்களைச் சுற்றிலும் பாருங்கள். உங்களது உதவி தேவைப்படுபவர்களுக்கு, உதவி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். இது உங்களது தொழில்முறை சார்ந்த அணுகுதலையும் எளிதாக்குகிறது.

தனுசு ராசிபலன்
உங்கள் உணர்வுகள் கட்டுப்பாடில்லாமல் இயங்குகின்றன. மேலும், நீங்கள் இதை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். மனஅழுத்தம் என்பது உங்கள் சக்தியை பெருமளவில் வீணடிக்கும் ஒரு நிலை ஆகும். உங்கள் நிலையினை தாழ்த்தும் செயல்களை வேறுபடுத்தி, அதனை புரிந்துகொள்ளுங்கள். இது கடந்த காலங்களில், நீங்கள் மற்றவர்களுக்கு செய்த தவறுகள், அல்லது ஏமாற்றம் சார்ந்தவையாகக் கூட இருக்கலாம். அத்தகைய சிக்கல்களிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நீங்கள் கண்டறியுங்கள்.

மகரம் ராசிபலன்
ஏமாற்றங்கள் உங்களை வாட்டுகிறதா? நீங்கள் மிகவும் விரக்தியடைகிறீர்கள் என்று உணர்வுபூர்வமாக அறிகிறீர்களா? ஏன் உங்களுக்கு மட்டுமே எப்போதும் கெட்ட காரியங்கள் நிகழ்கின்றன எனும் சூழலில், உங்களால் எதுவுமே செய்ய முடியவில்லையா? உங்களை நீங்களே சுயபரிதாபத்திற்கு ஆளாக்காதீர்கள். உண்மையிலேயே முயற்சித்தால், நீங்கள் நேர்மறையான விஷயங்களை காணலாம். மேலும், நீங்கள் நினைப்பதை விட, நீங்கள் பலமானவர் என்பதை உணருங்கள். எனவே, உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கைவிட்டு விடாதீர்கள்.

கும்பம் ராசிபலன்
உங்கள் மனதுக்கும், உடலுக்கும் பிரத்தியேக கவனம் தேவை. ஆனாலும், உங்கள் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் உங்கள் பாக்கெட்டை காலி செய்யும் செலவுகளைச் செய்வதில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உங்களை நேசிப்பவர்கள் இன்று உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள். மேலும், அவர்கள் உங்களை நேசிப்பதையும், அவர்கள் உங்களைப் பாராட்டுவதையும் நீங்கள் உணருவீர்கள். உங்கள் திறமையை அதிகரித்துக் கொள்ளக் கூடிய புத்தகங்களைப் படியுங்கள். ஏனென்றால் உங்களுக்கு மிக விரைவில் உயர் பதவி கிடைக்கலாம். உங்கள் மீது அக்கறை கொண்டு நீங்கள் வாழ்வில் முன்னேற வாழ்த்தும் நபர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். செய்ந்நன்றி மறத்தல் கூடாது.

மீனம் ராசிபலன்
நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. நீங்கள் உங்களது உடலில் தோன்றும் அறிகுறிகளைக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள அறிகுறிகளைக் காண இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நெருங்கிப் பழகுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களுக்கு நன்மை நடக்கும் நாட்களிலும் உடனிருந்தவர்கள் ஆவர். உங்களுக்கு உண்டாகும் அவநம்பிக்கையான அணுகுமுறையை ஒதுக்கி வைத்து விட்டு நல்ல விஷயங்களை நம்புங்கள்.
No comments