• Breaking News

    பொன்னமராவதி அருகே காரையூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை நல்வாழ்வு மன்ற கூட்டம் நடைபெற்றது


    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வட்டார அளவிலான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை நல்வாழ்வு மன்ற கூட்டம் நடத்தப்பட்டது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா உத்தரவின்படி மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் ராம் கணேஷ் அறிவுறுத்தலின்படி காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூட்டரங்கத்தில் நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை நல்வாழ்வு மன்ற கூட்டத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் தலைமை தாங்கினார்.டாக்டர் நவநீதன் முன்னிலை வகித்தார்.டாக்டர் ரவிக்குமார் அனைவரையும் வரவேற்புரை நிகழ்த்தினார்.பின்னர் தொடங்கிய காணொளி மூலமான கலந்தாய்வு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை சார்பில் காரையூர் வட்டார மருத்துவ துறை சார்பில் நடைபெற்று வரும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் அங்கன் வாடி மைய கட்டமைப்புகள் குடிநீர், மின்சாரம், கழிப்பிடம்,காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டியம் வேண்டும், செவிலியர்கள் குடியிருப்பு, கூட்டரங்கம், புதிய ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வகையான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் டாக்டர் ராமராஜன், டாக்டர் நீர்மல் நாதன், டாக்டர் ஹரிகரசுகன், டாக்டர் சுகன்யா,சுகாதார ஆய்வாளர்கள், ஆசிரியர்கள்,செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி கிராம செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள்,சமுதாய செவிலியர்கள், மருந்தாளருனர்கள், வட்டார கண் பரிசோதகர், கம்யூட்டர் ஆப்ரேட்டர் வடிவேல் மற்றும் காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.


    இரா.பாஸ்கர் செய்தியாளர்


    No comments