நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் முழு பாதுகாப்பு
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் பொங்கல் தின விழா பாதுகாப்பை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், மார்கெட் பகுதிகள், திரையரங்குகள் மற்றும் ஆற்றுப்படுகைகள் போன்ற இடங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் கண்காணிக்கவும், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 400 காவல் துறையினர் மற்றும் ,100 ஊர்க்காவல்படை வீரர்கள் என மொத்தம் 500 பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரிநாள் மற்றும் காணும் பொங்கல் தினத்தன்று ஆற்றங்கரைகளில் மற்றும் கடற்கரைகளில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை நீர்நிலைகளில் இறங்காதவாறு கவனமுடன் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துவது மற்றும் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாகை மாவட்டஅனைத்து பகுதிகளிலும் காவல் ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் ரோந்து அலுவலில் இருக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைத்துள்ளார்கள்.பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனையெனில் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 8428103090ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி. க
No comments