• Breaking News

    கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் கார்த்திக் சிதம்பரம்..... ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ்......



    தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் மோடிக்கு நிகரான தலைவர் ராகுல் காந்தி இல்லை என காங்கிரஸ் எனவும் வாக்குப்பதி இயந்திரத்தில் எந்தவிதமான முறைகேடு செய்வதற்கும் வாய்ப்புகளும் இல்லை என கூறியுள்ளார்.


    எனவே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாடு இருந்ததன் காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


    நாளை(ஜனவரி 10) காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    No comments