ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் பிறந்தநாள் விழா
ஈரோடு மாவட்டம் , ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி அவர்களின் 52 வது பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி. திருச்செல்வம் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ ஆர் ராஜேந்திரன், துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா, மண்டலத் தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரான தன்மானத் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்களின் இளைய மகன் இ.சஞ்சய் சம்பத் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநிலத் துணைத் தலைவர் எம்.ஜவஹர் அலி,துணைத் தலைவர்களான ஜே.பி.கோதண்டபாணி,பாபு என்கிற வெங்கடாஜலம்,பாஸ்கர்ராஜ்,பொதுச்செயலாளர் எ.வின்சென்ட், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் எம். ஜூபைர் அகமது, துணைத்தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி எம்.தீபா, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, எஸ் சி பிரிவு மாநகர் முன்னாள் தலைவர் கே பி சின்னசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கை சுப்பிரமணி, தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (டி சி டி யு) மாநில துணைத்தலைவர் குளம் எம் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகளான நூர்தீன்,மரப்பாலம் அய்யூப்கான், 51-வது வார்டு தலைவர் சூரம்பட்டி விஜயகுமார், சூரம்பட்டி கருக்குவேல், வேன் ராமசாமி, ஓ பி சி மாநகர் மாவட்ட தலைவர் சித்தோடு பிரபு மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments