• Breaking News

    மாலத்தீவு மேயர் தேர்தல்: ஆளும் கட்சி படுதோல்வி..... இந்தியா ஆதரவு கட்சி வெற்றி......


     இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடு மாலத்தீவு. கடந்த சில மாதங்களுக்கு அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அதிபராக சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகமது முய்சு பதவியேற்றார். அதன்பிறகு சீனாவுடன் அந்த நாடு நெருக்கம் காட்ட தொடங்கியது. இதற்கிடையே, அண்மையில் மாலத்தீவு மந்திரிகள் சிலர் இந்திய பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.


    கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மோடி குறித்து பேசிய மூன்று மந்திரிகளையும் மாலத்தீவு அரசு சஸ்பெண்ட் செய்தது. இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் மாலத்தீவு தலைநகர் மாலே-வில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்தியா ஆதரவு நிலைப்பாடு கொண்ட எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆடம் அசிம் வெற்றி பெற்றுள்ளார்.

    No comments