ஏவிசி கல்வி நிறுவனங்களின் சமத்துவப் பொங்கல் விழா
மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏவிசி கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கல்லூரியின் வளாகத்தில் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே.வெங்கட்ராமன் தலைமைவகித்தார். பொறியியல் கல்லூரியின் இயக்குனர் எம். செந்தில் முருகன், ஏவிசி கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன், தேர்வு நெறியாளர் மேஜர்.ஜி. ரவஇசஎல்வம், பொறியியல் கல்லூரி முதல்வர் சி.சுந்தர்ராஜ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ். கண்ணன், பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் ஏ. வளவன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். கல்லூரி மாணவ-மாணவிகளும் பேராசிரியர்களும் கரும்பு, பச்சரிசி, மஞ்சள், இஞ்சி ஆகிய கொத்துகள் கட்டப்ட்ட மண் பானையில் சமத்துவப்பொங்கல் வைத்து தமிழர் கலாச்சார மரபுபடி சூரியன் மற்றும் பசுக்களுக்கு படைத்து கொண்டாடினர். இதில் கல்லூரி நுண் கலை மன்ற மாணவ மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான சிலம்பம், சுருள், தீப்பந்தம் உள்ளிட்ட வீர விளையாட்டுக்கள், பரதநாட்டியம், கும்மி,ஒயில் ஆட்டம், நாடகம்,நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டீன் எஸ். மயில்வாகணன் மற்றும் ஏவிசி கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழாய்வுத்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
No comments