மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்..... ஜனவரி 23ம் தேதி திறப்பு......
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை. மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகை தினத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தமிழக அரசு மற்றும் மதுரை உயர் நீதிமன்றம் கிளை வழிகாட்டுதலின்படி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகிற15ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ம் தேதி தொடங்கவுள்ளது. அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது. அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, ‘’ இந்த வருடம் நடக்கக் கூடிய ஜல்லிக்கட்டு போட்டியில் எந்தவிதமான முறைக்கேடுகளுக்கும் வழிவகை செய்யாமல் மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெறும். ரூ.44 கோடி செலவில் 67 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை, வரும் ஜனவரி 23ம் தேதி திறந்து வைக்கிறார்’’ என கூறினார்.
No comments