• Breaking News

    கொமாரபாளையம் ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்க ஊராட்சி மன்ற தலைவர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்


    ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமார பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட         ஏ.கே.எஸ்., நகர், விநாயகர் கோவில் பின்புறம் செல்லும் மண் சாலையை,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூபாய்     6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் காங்கிரீட் சாலையாக தரம் உயர்த்தி பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது, கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் தலைமை தாங்கி பூமி பூஜையை துவக்கி வைத்தார் உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ் .ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் சுகுமார், வடிவேலு, வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு, ஊராட்சி செயலாளர் குமார்,மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர், நீண்ட நாட்களாக மண் சாலையாக இருந்த சாலையை  கான்கிரீட் சாலையாக மாற்ற முயற்சி மேற்க்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன்,அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


     மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments