• Breaking News

    புத்தாண்டு: மதுரையில் பூக்கள் விலை கடுமையாக உயர்வு

     


    புத்தாண்டை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. மல்லிகை ஒரு கிலோ ரூ.1,500க்கும் முல்லை ரூ.1,300க்கும், பிச்சிப்பூ ரூ.1,000க்கும் விற்கப்பட்டு வருகிறது.


    அதேபோல சம்பங்கிப்பூ ரூ.250க்கும், செவ்வந்தி ரூ.1,000க்கும், அரளி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பனிப்பொழிவு, வரத்து குறைவு மற்றும் புத்தாண்டு காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    No comments