• Breaking News

    நாகையில் வருவாய்துறை கிராம உதவியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

     


    நாகப்பட்டினம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் வட்டங்களுக்கு உள்ளடங்கிய பணியாளர்கள் இணைந்து 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் வட்டத் தலைவர்கள் ஆர். சரவணன் (நாகை),டீ.செல்லமுத்து (கீழ்வேளூர் ) ஆகியோர் தலைமையில் நேற்று (29/12/2023) நடைபெற்றது. இந்நிகழ்வில் சக்திவேல் அன்பரசன் சுமதி முன்னிலை வகித்தனர்.


    மாவட்ட செயலாளர் ஜி.நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் ஜி கலைச்செழியன்,மாவட்டத் துணைத் தலைவர் இ.புகழேந்தி வரவேற்புரை ஆற்றினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலம்முறை ஊதியத்தை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்கிடவும், அரசு ஆணை எண் 33ஐ திரும்ப பெற்று கருணை அடிப்படையில் ஆன பணி நியமனத்தை மீண்டும் வழங்கிடவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஊர்துபடியை மீண்டும் வழங்கிடவும் வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஷமித்பாஷா நன்றி உரையாற்றினார்.


    மக்கள் நேரம் நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி

    No comments