• Breaking News

    திருச்செங்கோடு அருகே போட்டோ ஸ்டூடியோ கடையின் பூட்டை உடைத்து ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள கேமராக்கள் திருட்டு


     நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் கூட்டப் பள்ளி அருகே உள்ள வேளாளர் காலனி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் நந்தகிருஷ்ணன்(29).  இவர் நேற்று இரவு 9.30 மணி அளவில் வழக்கம் போல் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். 


    இன்று காலை 6 மணி அளவில் ஸ்டுடியோ அருகில் இருந்த மளிகை கடைக்காரர் கடையைத் திறக்க வந்த போது ஸ்டுடியோ ஷட்டர் திறந்து இருப்பதையும்  பூட்டுகள் உடைக்கப் பட்டு தனது கடை வாசலில் கிடப்பதையும் பார்த்து நந்தகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து நந்த கிருஷ்ணன் கடைக்கு சென்று பார்த்தபோது சட்டரில் பூட்டப்பட்டிருந்த பூட்டுகள் இரண்டும் அருகில் இருந்த மளிகை கடையில் கிடப்பதையும் அரை சட்டர் மட்டும் திறந்த நிலையில் இருந்த நிலையில் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துகடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்புள்ள இரண்டு கேமராக்கள் மற்றும் விலை உயர்ந்த பேட்டரிகள் திருடு போய் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து உடனடியாக இது குறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

     தகவல் அறிந்து திருச்செங்கோடு நகர காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர்விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் சிசிடிவி கேமரா ஆதாரங்களை வைத்தும் காவல்துறையினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.எப்பொழுதும் வாகன நடமாட்டம் உள்ள இந்தப் பகுதியில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் கூட்டப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    திருச்செங்கோடு ஜெ.ஜெயக்குமார் 99425 12340

    No comments