• Breaking News

    பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பரத நாட்டியத்தில் உலக சாதனை


    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பரத நாட்டியத்தில் உலக சாதனை படைத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அரியனூர் 1008 சிவலிங்கம் கோவிலில் ராகஸ் நாட்டியாலயா அகாடமி ஏற்பாட்டில் நடைபெற்ற உலக சாதனை பதிவுக்கான பரதநாட்டியத்தில் ஒரே நேரத்தில் 1008 மாணவிகள் பங்குபெற்று பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர்.

     இப்பரதநாட்டியத்தில் பொன்னமராவதி இளந்தளிர் கலையகம் நடன ஆசிரியர் சுகன்யா சதிஷ்குமார் தலைமையிலான 27 மாணவிகள் கலந்து கொண்டு தமிழகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த நடனம், வெளிநாட்டினரை கவர்ந்திழுக்கும் நடனம் என்றால் அது பரத நாட்டியம் தான் என்பதையும் தெய்வீக கலை என்றும் பரத நாட்டியத்தை உலகமறிய செய்யும் வண்ணம் கீதாஞ்சலியுடன் தொடங்கிய பரத நாட்டியத்தில் மாணவிகள் பரதநாட்டியம் நடனமாடி உலக ரெக்கார்டு செய்து சாதனை படைத்துள்ளனர்.

     மேலும் இச்சாதனை இம்மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா, ஆசிரியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளி மாணவிகளை வெகுவாகப் பாராட்டினர்.இது குறித்து பேசிய இளந்தளிர் கலையகம் நடன ஆசிரியர் சுகன்யா சதிஷ்குமார் பேசுகையில் பள்ளி விடுமுறை என்பதால் ஆசிரியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவிகளை மனதார வாழ்த்தியதாகவும்.

    பள்ளி விடுமுறை முடிந்த உடன் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை படைத்த மாணவிகள் தாம் பெற்ற பாராட்டு நற்சான்றிதழ், சீல்டினை ஆசிரியர்களிடம் காண்பித்து வாழ்த்துகளை பெற உள்ளார்கள் என்றும் நடன ஆசிரியர் சுகன்யா சதிஷ்குமார் தெரிவித்தார்.



    இரா.பாஸ்கர் செய்தியாளர்


    No comments