பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடத்தினர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் சிறப்பு விழிப்புணர்வு முகாம் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்டத்திற்கு அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா அவர்கள் தலைமை தாங்கினார்.திட்ட அலுவலர் சோம. நாராயணி முன்னிலை வகித்தார்.புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ் அவர்கள் வாழ்த்துரை வழங்கி முகாமினை பார்வையிட்டு மாணவிகளை ஊக்குவித்தார்.உடன் பள்ளி துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து உடனிருந்தார்.
பின்பு திட்ட அலுவலர் சோம.நாராயணி நாட்டு நலப்பணித்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.ஏழு நாட்கள் நடைபெற்ற நாட்டு நலப்பணியில் மாணவிகள் பள்ளி வளாகத்தூய்மை முன்னெடுத்துச் செய்தனர்.மேலும் நோய்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், சேவையின் தேவை, பெண்கல்வியின் அவசியம் புதுமையான எண்ணம், குழு வாழ்வு, ஒற்றுமை, பகிர்ந்துகொள்ளுதல், சகிப்பு தன்மை மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றை பற்றி திட்ட அலுவலர் சோம. நாராயணி மாணவிகளிடையே விளக்கி கூறினார்.இம்முகாமில் வழக்குரைஞர் முருகேசன் மாணவிகளிடையே சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் சட்டம் (2012),குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006) பற்றியும்,குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 பெண்கள் பாதுகாப்பு எண்கள் 181 மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 பற்றியும் மற்றும் பாதுகாப்பு, பெண் உரிமைகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை மாணவிகளிடையே ஏற்படுத்தினார்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments